Maalaimalar
அமெரிக்காவில் வெறுப்பும் பாகுபாடும் அதிகரித்து வருகிறது: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்ரமணியம், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் டி பெக்வித்தை தோற்கடித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாக சுஹாஸ் சுப்ரமணியம் பிறந்தார். இவரது தந்தை சென்னையை சேர்ந்தவராகவும், தாயார் பெங்களூருவைச் சேர்ந்தவராகவும் அறியப்படுகின்றனர்…