Hindu Tamil Thisai
சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து 20 மாலுமிகள் மீட்பு - இந்திய கடற்படையின் துணிச்சல் நடவடிக்கை
புதுடெல்லி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து 20 மாலுமிகளை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. ஈரான் நாட்டுக்கு சொந்தமான ‘அசினி’ என்கிற மீன்பிடிக் கப்பல் கடந்த மாதம் 29-ம் தேதி சோமாலியாவின் வடகிழக்குக் கடற்கரைக்கு அப்பால் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் கப்பலை வழிமறித்து கடத்தினர். கப்பலில் இருந்த 20 ஈரானிய மாலுமிகள்…