Hindu Tamil Thisai
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
தோஹா: ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. ரவிந்தர் சிங், சவுரப் சவுத்திரி, அமன்பிரீத் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1,659 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. சீனா அணி (1,648) வெள்ளிப் பதக்கமும், கொரியா அணி…