Indian Express Tamil
Chennai News Today Updates: ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் போக்குவரத்து - இந்தியாவுக்கு முழு விலக்கு அளிப்பதாக ஈரான் அறிவிப்பு
Tamil Nadu News: பெட்ரோல் டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 6 சிலிண்டர் தருவோம் என்றார்கள், ஆனா 3 கூட மக்களுக்கு கிடைக்கவில்லை - மேயர் பிரியா தனது மேடைப்பேச்சுகளில் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்து வரும் சென்னை மேயர் பிரியா, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஆறு சிலிண்டர்கள் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு மூ…