உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஜனநாயகக் கட்சி வெற்றி - என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?

அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்தது. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இடைக்காலத் தேர்தலும் நடைபெறும். இந்த தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் ஆகிய இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது. 2 ஆண்டுகள் பதவிக்காலத்தைக் கொண்ட 435 உறுப்பினர்களுக்கான கீழவையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில் 220க்கும் அதிகமான இடங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. இதேபோல் 100 இடங…