Indian Express Tamil
கேரளாவுக்கு ரூ.8-க்கு ஒரு யூனிட் மின்சாரம்; த.வெ.க. அரசுக்கு சாத்தியமில்லாமல் போனது ஏன்? ஸ்டாலின் கேள்வி
கேரளாவில் நிலவிய மின் தட்டுப்பாட்டைப் போக்க, இமாச்சலப் பிரதேச மின்சார வாரியத்திடம் இருந்து ஒரு யூனிட் ரூ. 14.50 (பின்னர் பேச்சுவார்த்தை மூலம் ரூ.12.50 ஆகக் குறைக்கப்பட்டது) என்ற அதிக விலைக்கு மின்சாரம் வாங்க கேரள மின்சார வாரியத்தின் (KSEB) தலைவராக இருந்த எம். ஜி. ராஜமாணிக்கம் ராஜமாணிக்கம் உடன்பாடு செய்திருந்தார். இதற்கிடையில், ஒரு தனியார் நிறுவனம் (GNA மூலம்) ஒரு யூனிட் ரூ. 8.645 என்ற குறைந்த விலையில் 500 மெகாவாட் மின்சாரத்தை வழங்க முன்வந்தது. ஆனால், இந்த தனியார் ஒப்பந்தத்தின்படி பகல் மற்றும் இரவு என இருவேளையிலும் மின்சாரத்தை வாங்க வேண்டும். கேரளாவிற்கு பகல் நேரத்தில் கூடுதல் மின்சாரம் தேவையி…