உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

'வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்புத் திட்டம்'.. ரூ.100-க்கு 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்களில் 100ரூபாய்க்கு 10 காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இத்தொகுப்பில் அரை கிலோ பெரிய வெங்காயம் ,அரைகிலோ தக்காளி ,கால்கிலோ கத்தரிக்காய் ,கால் கிலோ உருளைக்கிழங்கு கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், 400 கிராம் எடைகொண்ட ஒரு தேங்காயும் வழங்கப்படும்.