Indian Express Tamil
சென்னை மெட்ரோ ரயில் சேவை: போரூர் – வடபழனி இடையேயான மஞ்சள் வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் மெட்ரோ ரயில் சேவை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக, அலுவலகங்களுக்குச் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அன்றாடப் பணிகளுக்காக வெளியே செல்வோர் எனப் பலரும் விரைவான பயணத்திற்காக மெட்ரோ ரயில்களை நம்பியுள்ளனர். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, போரூர் முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில…