Daily Thanthi
மார்பில் பாய்ந்த கத்தரிக்கோல்: 3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அகமதாபாத் மருத்துவர்கள்!
அகமதாபாத், விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மார்பில் கத்தரிக்கோல் பாய்ந்து உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமியை, அகமதாபாத் சிவில் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றியுள்ளனர். விளையாட்டின் போது நேர்ந்த விபரீதம் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியின் 3 வயது மகள், கடந்த மாதம் 29-ம் தேதி காலை 11 மணியளவில் தனது 5 வயது மூத்த சகோதரனுடன் வீட்டில்…