உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’பறிபோகும் மாணவர்களின் எதிர்காலம்!’; நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

வளர்ந்து வரும் அதிநவீன தகவல் தொழில்நுட்ப உலகில், 'கணினி அறிவியல்' என்பது இன்றைய மாணவர்களின் எதிர்காலக் கல்வி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புடன் நேரடியாகத் தொடர்புடைய மிக முக்கியமான துறையாகும். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் விதமாக, தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்குத் தொடர்ச்சியாகவே முக்கியத்துவம் அளிக்கப்படாத அவல நிலை நீடித்து வருவது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் 'ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்' (சமக்ர சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ) என்பதன் கீழ், தகவல் தொழில்நுட்பக் கல்வி மேம்படுத்த ஐசிடி ஆய்வகம், கணினி உபகரணம், இணைய வசத…