உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

காவல்துறை எடுத்த முன்னெடுப்பு; அடுத்த கட்ட வெற்றியில் ‘டோரதி’

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியான ‘டோரதி’ படம் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. படத்தில் பேசப்பட்ட பாலின பாகுபாடு, மூன்றாம் பாலினத்தவரின் சவால்கள், சமூக ஒடுக்குமுறை உள்ளிட்ட விஷயங்கள் சினிமாவைத் தாண்டி அரசியல் தளத்திலும் பேசு பொருளானது. இதன் அடுத்தகட்டமாக தற்போது அரசு காவல்துறை மத்தியில் இப்படம் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநர் செந்தில் வேலன் ஐபிஎஸ் இப்படம் தொடர்பாக ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்வு ‘பாலின உணர்திறன் மற்றும் பாலினப் பொறுப்புள்ள காவல் பணிக்கு ஊடகமாகத் திரைப்படம்’ என்ற தலைப…