உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரிசியைக் கழுவுவதிலும் ஒரு கணக்கு இருக்கு; கீரையை வேக வைப்பதிலும் ஒரு அறிவியல் இருக்கு... தினமும் சமையலில் செய்யும் 5 சின்னத் தவறுகள்

நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும் என்பதற்காக காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் எனப் பலவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். ஆனால், உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்டும் அக்கறையை அவற்றைச் சமைக்கும் முறையிலும் காட்டுகிறோமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், சமையலறையில் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் சில வழக்கமான பழக்கங்கள் உணவில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகளின் அளவைக் குறைக்கக்கூடும். அரிசியைத் திரும்பத் திரும்பக் கழுவுவது, கீரையை அதிக நேரம் வேகவைப்பது, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது போன்ற செயல்…