Indian Express Tamil
தரமற்ற வெங்காயத்தை வாங்க மறுத்த தமிழக அரசு; திருவாரூருக்கு வெங்காயம் ஏற்றிய லாரி திருச்சியில் காத்திருப்பு
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் வெளிச்சந்தையில் மக்கள் கஷ்டப்பட்டனர். இதனால் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் 'நாபெட்' எனப்படும் தேசியவேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம் வெங்காயம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு கடைகளில் ரூ.35க்கு விற்கப்படுகிறது. இதுவரை 3 கட்டங்களாக வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக 'நாபெட்'அமைப்பு அனுப்பிய 450 டன் வெங்காயம் தர மற்றதாக இருந்ததால் தமிழக அரசு அதைபெறவில்லை. அந்த வெங்காயம் சென்னை கொருக்குப்பேட்டை சரக்கு ரயில் முனையத்தில் வீணாகி வருகிறது என தகவல் வெளியானது. இந்தநிலையில், அங்கிருந…