உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

விஜய் வழங்கும் தவெக கல்வி விருது விழா: மாணவர்களுக்காக தயாராகும் பிரம்மாண்ட விருந்து- மெனுவில் என்னென்ன ஸ்பெஷல்?

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 2 மணியளவில் தவெக தலைவர் விஜய் அவர்கள் மேடையேறி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். ​