IBC Tamil
பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் தொடருந்துகள் இன்று இயங்காது
மலையக தொடருந்து பாதையின் பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவிற்கு இடையே, 162/54 மைல் கல் பகுதிக்கு அருகில் இன்று (04) அதிகாலை பாரிய மண் மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்தமையினால் தொடருந்து போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது. தொடருந்து பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை செல்லலாம் என நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த 'பொடி மெனிகே' தொடருந்து இன்று பண்டா...