Indian Express Tamil
கேஸ் சிலிண்டர் வாங்கும்போது எடையை மட்டும் பார்க்காதீங்க... இந்தக் குறியீட்டையும் செக் பண்ணுங்க
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரில் பலரும் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான விஷயம் அதன் கழுத்துப் பகுதியில் உள்ள இரும்பு வளையத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து மற்றும் எண்கள். A-26, B-27, C-27, D-26 என எழுதப்பட்டிருக்கும் இந்தக் குறியீடுகள் வெறும் அடையாள எண்கள் அல்ல. அவை அந்தச் சிலிண்டரின் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்வதற்காக அடுத்ததாகச் சோதனை செய்ய வேண்டிய காலக்கெடுவைக் குறிப்பிடுகின்றன. சிலிண்டர் வாங்கும்போது அதன் எடை, சீல் மற்றும் எரிவாயு அளவு ஆகியவற்றைக் கவனிக்கும் பலரும் இந்தக் குறியீட்டைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சிலிண்டரின் பாதுகாப்புடன் தொடர்பு…