உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - மத்திய அரசிடம் ஸ்ட்ரிக்டாக கூறிய முதல்வர் விஜய்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால்,…