Indian Express Tamil
ரிலீசுக்கு ரெடியான சூர்யாவின் சீன்: அட்வான்ஸ் புக்கிங் கேரளாவில் மட்டும் இத்தனை கோடியா? ஆச்சரிய வசூலுக்கு காரணம் இதுதான்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடிப்பில் சீன், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், இந்த இரு படங்களின் முன்பதிவு நிலவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டு சூர்யாவுக்கு சிறப்பாக ஆண்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய இரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், இந்த ஆண்டின் 3-வது படமாக சீன் வெளியாக உள்ளது. மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்தின் மூலம் பெரிய இடைவெளிக்கு பிறகு நடிகை நஸ்ரியா நசீம் தமிழில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்ட…