உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இங்கிலாந்தில் செட்டிலாக ஆசையா? இனி 5 ஆண்டுகள் போதாது; 10 முதல் 30 ஆண்டுகள் வரை காத்திருக்கணும்

இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறுவது இனி அந்நாட்டில் கழித்த ஆண்டுகளை மட்டும் பொறுத்தது அல்ல. ஒருவரின் வருமானம், குற்றப்பின்னணி மற்றும் விசா வகையே அவர் 3 ஆண்டுகளில் குடியேறுவாரா அல்லது 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும். இங்கிலாந்து உள்துறைச் செயலர் ஷபானா முகமூட் புதிய கட்டமைப்பு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், வழக்கமாக 5 ஆண்டுகளாக இருந்த நிரந்தரக் குடியுரிமைக்கான தகுதிக் காலம் இனி 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மலை; மறுபக்கம் பாதாளம்: விமானப் பயணமே சவாலாக இருக்கும் இந்தியாவின் பக்கத்து நாடு புதிய விதிகளின் 5 முக்கிய நிபந்தனைகள…