Nakkheeran
”வேலை இல்லாதவர்கள்... வேலைக்கு செல்பவர்களை...”; கொந்தளிக்கும் கன்னட அமைப்பினர்
தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு கன்னட அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர், தகவல் தொழில் நுட்ப (ஐ.டி) நிறுவனங்கள் நிறைந்த நகரமாகும். இங்குப் பல மொழி பேசும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் கர்நாடக பெண் ஒருவர், பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் கன்னடர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழியாவார்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படு…