Indian Express Tamil
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க
இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக நுண்கதிர்வீச்சாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: B.Sc in Radiography/ Diploma in Radiography படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க…