Polimer News
காவிரியாற்றில் சாயத் துணிகளை அலசும் பட்டறை உரிமையாளர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரியாற்றில் இரவில் சாயத் துணிகளைக் குவித்து வைத்து அலசும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். View this post on Instagram குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சாயக்கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தனியார் சாயப்பட்டறை உரிமையாளர்கள், இரவு நேரங்களில் பள்ளிபாளையம் அருகே உள்ள சொக்கராயன் பேட்டை பகுதி காவிரி ஆற்றில் பிரின்டிங் செய்யப்பட்ட சாயத்துணிகளை சுத்தம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.