உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

குடிபோதையில் தனியார் பள்ளி வாகனத்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் ஜெயப்பிரியா தனியார் பள்ளி வாகனத்தில் இன்று காலை மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஓட்டுநர் உச்சிமேடு பகுதியில் வாகனத்தை திடீரென தாறுமாறாக ஓட்டி விவசாய நிலத்தில் இறக்கினார். இதனால் வேனில் இருந்து மாணவ மாணவியர் அலறி அடித்து கூச்சலிட்டதால் அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததும் அதே வாகனத்தில் மது பாட்டில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.