உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இவிஎம்-ஐ ஏற்காத அமெரிக்கா: பல கோடி வாக்குச்சீட்டுகளை சில மணி நேரங்களில் எண்ணி முடிக்கும் ரகசியம்!

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் போது வாக்குப்பதிவு முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், உலகின் மற்றொரு வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றும் வாக்குச்சீட்டு முறையே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களின் முடிவுகள் வெளியாவதற்குப் பல நாட்கள் வரை ஆகும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் பல கோடி வாக்குச்சீட்டுகள் பதிவாகியும், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் எவ்வாறு மளமளவென வெளியாகின்றன என்பது உலக நாடுகள…