உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் அழுகிக் கிடக்கும் வெங்காயம்; துப்பற்ற டம்மி சி.எம்; 24-ம் புலிகேசி ஆட்சி: காரமாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "எம்.எல்.ஏ-க்களை வாங்க தெரிந்த டம்மி சி.எம்-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே,…