Indian Express Tamil
இந்தியாவுக்கு வந்த இடத்தில் இதையா பார்க்கணும்? வெட்கி தலைகுனிய வைத்த செயல்; உடனே களத்தில் இறங்கிய ஃபாரின் பெண்
இந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டர் ஆனந்த் என்பவர், தனது தைவான் நாட்டு தோழிக்கு தனது சொந்த ஊரை சுற்றி காட்டுவதற்காக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மலைவாசல் தலமான முசூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இமாலய மலைத்தொடரின் பேரழகை ரசிக்கக்கூடிய, புத்தர் சிலை மற்றும் பிரார்த்தனைக் கொடிகள் நிறைந்த புனித தலமான 'டலாய் ஹில்ஸ்' (Dalai Hills) பகுதிக்கு அவர்கள் சென்றனர். ஆனால், அங்கு அலங்கோலமாக கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பைகள் மற்றும் குப்பைகளை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இங்கிலாந்தில் செட்டிலாக ஆசையா? இனி 5 ஆண்டுகள் போதாது; 10 முதல் 30 ஆண்டுகள் வரை காத்திருக்கண…