உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

விசில், சிலிண்டர், ஈமு கோழி வடிவ பட்டாசுகள்.. டிரெண்டுக்கு ஏற்ப வித விதமான பட்டாசுகள் அறிமுகம்

விழுப்புரத்தில் வழக்கமான வெடிக்கும் பட்டாசுகளைத் தாண்டி இந்த ஆண்டு புதிதாக டிரெண்டுக்கு ஏற்றார் போல விசில், சிலிண்டர், ஈமு கோழி போன்று கண்களைக் கவரும் புதிய வடிவ பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். சிறுவர்களைக் கவரும் வகையில் பீட்சா, செஸ் போர்டு, கிண்டர் ஜாய், குல்பி விசில், பேட், ஆப்பிள் உள்ளிட்ட வடிவங்களிலும் மீன் வடிவில் பேன்ஸி பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளது. யானை வடிவ பட்டாசுகள், கையில் பிடித்து வாசிக்கக்கூடிய கிடார் வடிவ பட்டாசுகள், வேல் வடிவிலான பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளன.