Nakkheeran
“உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும்” - முதல்வர் விஜய் கோரிக்கை!
இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளில் ஒன்றான மாண்பமை உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்வரும் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கை 1980ஆம் ஆண்டிலேயே மாநில அரசால் முன்வைக்கப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, உச்சநீதிமன்றம் தில்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்…