உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளி முன்னெச்சரிக்கை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீக்காய சிறப்பு வார்டு – சுகாதாரத் துறை உத்தரவு!

தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தீக்காய்த்தூக்கான சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.பட்டாசு விபத்தில் காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள், களிம்புகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.