Daily Thanthi
தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்! - ரவி மோகன்
சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரவி மோகன், விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். விளம்பர வாய்ப்புகளை மிகவும் கவனமாகத் தேர்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன் ‘ஜெயம்…