Indian Express Tamil
புயல் சின்னம் இல்லாமலேயே மழை; மேற்கு, தெற்கு மாவட்டங்களுக்கு ஹேப்பி நியூஸ்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து பிரபல சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் (பிரதீப் ஜான்) முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது வங்கக்கடலில் எந்தவித குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமோ அல்லது புயல் சின்னங்களோ உருவாகவில்லை. இருப்பினும், கிழக்கிலிருந்து வீசும் கீழடுக்குக் காற்றழுத்தக் காற்று எவ்வித தடையும் இன்றி தமிழக நிலப்பரப்புக்குள் எளிதாக ஊடுருவி வருகிறது. இதன் காரணமாக, உள் மாவட்டங்களிலும், மேற்கு மற்றும் தெற்கு தமிழகப் பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்…