Daily Thanthi
கடல் கன்னி கண்காட்சியில் விபரீதம்: கண்ணாடி தொட்டி வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் காயம்
லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா கண்காட்சியில், கடல் கன்னி சாகச நிகழ்ச்சியின் போது கண்ணாடித் தொட்டி திடீரென வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 'கடல் கன்னி' சாகச நிகழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் பக்கர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கலேபூர் கிராமத்தில் 'தாதா மியான் உர்ஸ்…