உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கரூர் வெண்ணெய்மலை முருகன் கோவில்: 3085 ஏக்கர் இனாம் நிலம் பத்திரப்பதிவுக்கு தடை - உயர்நீதிமன்றம்

கரூர் வெண்ணெய்மலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சொந்தமான 3085 ஏக்கர் இனாம் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொள்ள வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்கு சொந்தமாக 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களை பதிவு செய்ய பதிவுத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த நிலங்களை ஆக்கிரமித்திர…