Indian Express Tamil
தீபாவளி முடிந்து ஊர் திரும்புவோருக்கு குட் நியூஸ்; காரைக்குடி, ராஜபாளையம், தென்காசி வழியாகத் தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்குத் திரும்பும் தென் மாவட்டப் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சிறப்பு ரயில் (06111) நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்குத் தாம்பரத்தில்…