Nakkheeran
’மாமூல் பிரிப்பதில் தகராறு’; சொந்த கட்சியினரே எம்.எல்.ஏ வை தா@கிய அதிர்ச்சி சம்பவம்
மாமூல் பணத்தைப் பகிர்ந்துகொள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த கட்சியினரே சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம், மிதினாப்பூர் மாவட்டத்தின் தெப்ரா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருபவர் சபாஷிஸ் ஓம். அதே போல, மாவட்ட பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் தன்மய் தாஸ். இவர்கள் இருவருக்குமிடையே அரசுத் திட்டங்கள் சார்ந்த விவகாரங்களில் மாமூல் வசூலிப்பது தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று இவர்கள் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இ…