Indian Express Tamil
காலேஜ் அக்கவுண்ட்டிலேயே கைவரிசை: ரூ. 8 கோடியை சுருட்டிய சைபர் குற்றவாளிகள்; போலீஸ் விசாரணை
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ முதுநிலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் நிலுவை ஊதியத்தை உடனடியாக செலுத்த வலியுறுத்தி பணியாளர்கள் அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து இரண்டு மாதத்தி…