உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல மணவிழா சர்ச்சை - சுப.உதயகுமாரன்

ஆயிரமாயிரம் பேர் பற்பல தியாகங்கள் செய்து, உண்மையாக உழைத்து வளர்த்த இயக்கம் திமுக. சற்றொப்ப ஒரு நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றிய திராவிட இயக்கம் அதன் அந்திமக் காலத்தை வந்தடைந்திருக்கிறது. திமுகவின் “பொதுச் செயலாளர்” வீட்டுத் திருமணத்திலேயே “வேத விற்பன்னர்கள்” சமஸ்கிருத மொழியில் மந்திரம் முழங்க, தலைமை கழகக் கண்மணிகள் கலந்துகொண்ட காட்சிகளைக் கண்டு மனம் கொந்தளிக்கிறது என குமுறுகிறார் திமுக உடன்பிறப்பின் மகன் சுப.உதயகுமாரன்