உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’இனி இவர்களுக்கு அரசு வேலை கிடையாது’; முதல்வர் அதிரடி அறிவிப்பு

பலதார மணம் முடிக்கும் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில அரசு புதிய சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, ’அசாம் பணிகள் ஒழுங்கு விதிகள் 1964’ -ல் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளும் எந்தவொரு அரசு ஊழியரும் பணியிலிருந்து நீக்கப்படுவார். மேலும், அவர்கள் எதிர்காலத்திலும் அரசுப் பணிகளில் சேருவதற்கும் தகுதியற்றவராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு விதியின் 7-ஆவது பிரிவில், புதிய உட்பிரிவு (6) சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் மனைவி…