Vikatan
'உங்களைப் போலவே எங்கள் எம்எல்ஏ-வும் குழந்தையுடன் பணியாற்றுகிறார்!' - ஜெர்மன் தொழிலதிபரிடம் கீர்த்தனா
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், உலக நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றிருக்கிறார். அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அந்த வகையில் குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சென்ற அவர், குழந்தையை சுமந்தபடி அலுவலக பணிகளைக் கவனித்து வந்த அந்நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை சந்தித்திருக்கிறார்…