உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“என்னுடய அதிர்ஷ்ட தேவதை” - நடிகையை புகழந்த அர்ஜூன் தாஸ்

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் அர்ஜுன் தாஸ் பேசியதாவது, “இந்தப் படத்தின் கதையை முதலில் இயக்குநர் மதுமிதா என்னிடம் சொன்னபோது, கதையைப் படித்துப் பாருங்கள் என்றுதான் கூறினார். கதையைப் படித்துவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தேன். அதன்பிறகு இப்படத்தை ‘பாகுபலி’ உள…