உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“பெரியார் அறிவுலகத்தைத் தமிழ்நாட்டின் அடையாளமாக உருவாக்கியுள்ளோம்” - மு.க. ஸ்டாலின் பேச்சு!

கோவையில் திராவிடர் கழகம் சார்பில், ‘பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா’ என்ற பெயரில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா இன்று (04.11.2026) நடைபெற்றது. இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “ஓராண்டு காலம் மிசா சிறைவாசத்தின்போது, ஆசிரியர் வீரமணி பாதுகாப்பில்தான் நான் இருந்தேன். இப்போதும் நம்மை வீழ்த்துவதற்காக என் மீது வீசப்படக்கூடிய அவதூறுகளுக்கு ஆதாரங்களோடு தக்க பதிலளித்து, அறிக்கைகளை வெளியிட்டு, விமர்சனத் தாக்குதல்களை முறியடிக்கும் முதல் நபர் யார் என்று கேட்டால், நமது ஐயா ஆசிரியர் வீரமணி அவர்கள்தான். ஆசிரியர் வீரமணி அவர்கள…