உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்ஸ்டாகிராம் காதல்: பள்ளி மாணவியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் வெங்கடேசன் (30 வயது). இவருக்கும் 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி சிறுமியை ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் அழைத்துச் சென்று ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்…