உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்பு

சென்னை, சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் வழக்கம்போல் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது…