Indian Express Tamil
பாத்திரம் சுத்தமாகுது... ஆனா ஸ்பான்ஜ் சுத்தமா இருக்கா? டாய்லெட்டை விட அதிக கிருமிகள் இருக்க வாய்ப்பு
நம்மில் பலரும் வீட்டின் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம். தினமும் பாத்திரங்களைக் கழுவுவது, அடுப்பைத் துடைப்பது, சமையல் மேடையைச் சுத்தம் செய்வது எனப் பல வேலைகளைச் செய்கிறோம். ஆனால், இந்த வேலைகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் ஸ்பான்ஜை மட்டும் பெரும்பாலும் கவனிப்பதில்லை. ஒரு முறை வாங்கிய ஸ்பான்ஜை மாதக்கணக்கில் பயன்படுத்துவதும், அது அழுக்காகத் தெரிந்தால் மட்டும் மாற்றுவதும் பல வீடுகளில் வழக்கமாக இருக்கிறது. ஆனால், பார்ப்பதற்குச் சுத்தமாக இருக்கும் ஒரு ஸ்பான்ஜுக்குள் கண்ணுக்குத் தெரியாத ஏராளமான பாக்டீரியாக்கள் வாழக்கூடும் என்பது உங்களுக்கு…