Polimer News
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் டியோவின் உள் திரை சேதம்..!
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய அதன் முதல் மடிக்கக்கூடிய Foldable செல்போன் ஆன ஐபோன் டியோவின் iPhone Duo உள் திரை Inner Display வாங்கிய சில மணிநேரங்களிலேயே நடுப்பகுதியில் விரிசல் அடைந்து சேதமடைவதாக உலகளவில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஐபோன் டியோவின் திரை சேதப் புகார்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இலவச மாற்றுப் போன்களை வழங்கி வருகிறது. சேதமடைந்த போன்களைத் தங்களின் கலிபோர்னியா பொறியியல் குழுவிற்கு அனுப்பி, இந்த வடிவமைப்பு பிழைக்கான துல்லியமான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது