IBC Tamil
1.7 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியம்!
விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபையின் ஊடாக, 60 வயதைப் பூர்த்தி செய்துள்ள 170,950 விவசாயிகளுக்கு மாதாந்தம் 415 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள 3,975 தபால் நிலையங்கள் ஊடாக இந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் முன்னெடுக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் குவிந்திருந்த பெருமள...