Nakkheeran
“அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா?” - கரூர் அரசுப் பணி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி!
கடந்த ஆண்டு தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில், கடந்தாண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாகச் சிறார்கள் உட்பட 41 பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்க இருப்பதாக அறிவித்தது. அதன் படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினருக்குக் கடந்த ஜ…