Indian Express Tamil
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராகத் திரும்பிய மக்கள்; இந்தியர்களின் எச் 1 பி விசா, கிரீன் கார்டு கனவுக்கு இனி என்னாகும்?
நவம்பர் 4, புதன்கிழமை வெளியான அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள், அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரான தீர்ப்பாக அமைந்துள்ளன. ஆளும் குடியரசுக் கட்சியிடமிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது. இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில், செனட்டில் பெரும்பான்மைக்குத் தேவையான 51 இடங்களில் 54 இடங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்குத்…