Nakkheeran
’இனி தடையில்லை’; இந்தியாவிற்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
கடந்த பிப்ராரி மாதம் முதற்கொண்டே மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போரின் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்து முடங்கிப்போனது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, உலக நாடுகள் பலவும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இந்த ஹார்மோஸ் நீரிணை வழியாகவே இந்தியாவிற்கான 30% கச்சா எண்ணெய் மற்றும் 90% சதவீத எரிவாயு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்த பாதை அடைக்கப்பட்டதால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது. இருப்பினும்…