உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்: கோப்பையை தட்டிச் சென்ற பிரதீக் சோனாவனே

கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற, சி.டி.ஆர், ஜே.கே டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று மிகவும் பரபரப்பாக நிறைவடைந்தது. மொத்தம் 8 பந்தயங்கள் நடைபெற்றன. எல்.ஜி.பி பார்முலா 4 பிரிவின் முதல் பந்தயத்தில் மெக்கோ ரேசிங் அணியின் துருவ் கோஸ்வாமி அபாரமாகச் செயல்பட்டு முதலிடத்தைப் பிடித்தார். மெஹுல் அகர்வால் மற்றும் ஆர்யா சிங் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது பந்தயம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் பாலா பிரசாத் முதலிடமும், அகர்வால் இரண்டாமிடமும், ராகுல் ரங்கசாமி மூன்றாமிட…